மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + In Playankottai The man who married the girl was arrested in Pocso law

பாளையங்கோட்டையில் சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

பாளையங்கோட்டையில் சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
பாளையங்கோட்டையில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை, 

பாளையங்கோட்டையில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறுமியுடன் திருமணம் 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் சிவன் மகன் சுந்தரபாண்டி (வயது 23) கூலி தொழிலாளி. இவருக்கும், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த சிறுமியை தனியாக சந்தித்து பேசி வந்தார். இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

சுந்தரபாண்டி ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சுந்தரபாண்டியால் தனது வீட்டுக்கும் போக முடியவில்லை.

போக்சோ சட்டத்தில் கைது 

இதையடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் அந்த சிறுமிக்கு 17 வயது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து திருமணம் வயதை எட்டாத மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்ததாக சுந்தரபாண்டி மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.