மாவட்ட செய்திகள்

சொக்கம்பட்டி அருகே அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் சாவுநடைபயிற்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் + "||" + Government bus collides near Sokkampatti The death of the auto driver

சொக்கம்பட்டி அருகே அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் சாவுநடைபயிற்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

சொக்கம்பட்டி அருகே அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் சாவுநடைபயிற்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
சொக்கம்பட்டி அருகே சாலையோரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற ஆட்டோ டிரைவர் மீது அரசு பஸ் மோதி பலியானார்.
அச்சன்புதூர், 

சொக்கம்பட்டி அருகே சாலையோரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற ஆட்டோ டிரைவர் மீது அரசு பஸ் மோதி பலியானார்.

ஆட்டோ டிரைவர் 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள காசிதர்மம் வடக்கு தெருவை சேர்ந்த முத்தையா மகன் திருமலைக்குமார் என்ற அல்லாஹ்(வயது40). ஆட்டோ டிரைவர்.

இவர் நேற்று சொக்கம்பட்டி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டிக்கு மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். மாலையில் அவர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். நடைபயிற்சியை முடித்து கொண்டு அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக, செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

சாவு 

இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்தவெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த திருமலைக்குமாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.