மாவட்ட செய்திகள்

பிரேசிலில் இருந்து சென்னை வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + For Computer Engineer Coronavirus Symptom Admission to government hospital

பிரேசிலில் இருந்து சென்னை வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரேசிலில் இருந்து சென்னை வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
பிரேசிலில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டதால் அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் சென்னை வரும் பயணிகள், விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பணியில் சிறப்பு மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.


இந்தநிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு பிரேசிலில் இருந்து துபாய் வழியாக விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சிறப்பு மருத்துவ குழுவினர் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

அப்போது பிரேசிலில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் சென்னை கீழ்க்கட்டளையைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(வயது 32) என்பவரை மருத்துவ குழுவினர் நவீன கருவி மூலம் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதாக கண்டுபிடித்தனர்.

இது கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் விமான நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக ராஜேஷ்குமாரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.