மாவட்ட செய்திகள்

திருச்சியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு + "||" + One killed in car-motorcycle accident in Trichy

திருச்சியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

திருச்சியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
திருச்சியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார். பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
திருச்சி,

திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள குலவைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் கிஷோர்(வயது 18). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர், திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள உடையான்பட்டி வசந்தம்நகரை சேர்ந்த விக்னேஷ்வர்(18). இவர் பி.பார்ம் பட்டயப்படிப்பு படித்து வந்தார். இருவரும் விளையாட்டு வீரர்கள்.


இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருச்சி மாநகருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர், இரவில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை கிஷோர் ஓட்ட, விக்னேஷ்வர் பின்னால் அமர்ந்திருந்தார். திருச்சி தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து வேகமாக வந்த கார், முதலியார் சத்திரம் குட்ஷெட் செல்லும் வழியில் திடீரென திரும்பியது. அப்போது மோட்டார் சைக்கிள் காரின் முன்பக்க பக்கவாட்டு கதவில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிஷோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சாவு

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய விக்னேஷ்வரை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் காரை ஓட்டி வந்த திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதிநகரை சேர்ந்த காதர்பாஷா(43), அவருடன் வந்த குடும்பத்தினரும் காயம் அடைந்தனர். இது பற்றி திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ்வர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பிறந்தநாள் கொண்டாடினார்

விபத்தில் பலியான விக்னேஷ்வர் பற்றிய உருக்கமான தகவல் கிடைத்தது. அதாவது, நேற்று முன்தினம் விக்னேஷ்வருக்கு பிறந்தநாள் ஆகும். அதற்காக, தனது நண்பர் கிஷோர் மற்றும் சில நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது. கொண்டாட்டம் முடிந்து இரவு வேளையில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த காதர்பாட்ஷாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் கிருமிநாசினி திரவம் குடித்து 13 பேர் பரிதாப சாவு
ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினி திரவம் குடித்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. வண்டலூர் பூங்காவில் சிறுத்தைப்புலி சாவு
ஊட்டியில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
3. அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு உடலை புதைக்க முயன்றதால் பரபரப்பு
அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை புதைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 92 பேர் சாவு மொத்த பலி எண்ணிக்கை 2,147 ஆக உயர்ந்தது
கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் மேல் நீடித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 92 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனார். இதுவரை மாநிலத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,147 ஆக உயர்ந்து உள்ளது.
5. நத்தம் அருகே கோவில் காளை சாவு
கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்தது.