மாவட்ட செய்திகள்

தாரமங்கலம் அருகே, விபத்தில் சேலம் சிறை வார்டன் பலி + "||" + Salem prison warden killed in accident near Taramangalam

தாரமங்கலம் அருகே, விபத்தில் சேலம் சிறை வார்டன் பலி

தாரமங்கலம் அருகே, விபத்தில் சேலம் சிறை வார்டன் பலி
தாரமங்கலம் அருகே, விபத்தில் சேலம் சிறை வார்டன் பலியானார்.
தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கிரண்ராஜ் (வயது 21). திருமணம் ஆகாதவர். சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சப்-ஜெயிலில் கிரண்ராஜ் வார்டனாக வேலைபார்த்து வந்தார்.


இந்தநிலையில் கிரண்ராஜ் கடந்த 12-ந்தேதி அமரகுந்தியில் உள்ள வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

விபத்தில் பலி

கே.ஆர்.தோப்பூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் அருகில் வந்தபோது ரோட்டின் மத்தியில் உள்ள பேரிகாட்டில் (தடுப்பு) எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் கிரண்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கிரண்ராஜ் இறந்தார்.

இதுகுறித்து தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மயில்சாமி, ஆனந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிறை வார்டன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளியணை அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி தண்ணீர் குடிக்க சென்றபோது பரிதாபம்
வெள்ளியணை அருகே தண்ணீர் குடிக்க சென்றபோது பள்ளி மாணவர்கள் 2 பேர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
2. பழனி அருகே யானை மிதித்து முதியவர் பலி உடலை டோலி கட்டி தூக்கி வந்த பரிதாபம்
பழனி அருகே முதியவரை யானை மிதித்து கொன்றது. அவரது உடலை டோலி கட்டி வனத்துறையினர் தூக்கி வந்தனர்.
3. லாரி–மோட்டார்சைக்கிள் மோதலில் தொழிலாளி பலி ; லிப்டு கேட்டுச்சென்ற 2 வாலிபர்கள் படுகாயம்
சோளிங்கர் அருகே லாரி–மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. அவினாசி அருகே பயங்கரம்: லாரி மீது கார் மோதியது என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலி 2 பேர் படுகாயம்
அவினாசி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: கல்லூரி பஸ் மோதியதில் மாணவர் பலி
மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர் மீது கல்லூரி பஸ் மோதியது. இந்த விபத்தில் அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.