பாதாள சாக்கடை பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த டிரைவர் - தீயணைப்புத்துறையினர் மீட்டனர்


பாதாள சாக்கடை பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த டிரைவர் - தீயணைப்புத்துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 16 March 2020 3:45 AM IST (Updated: 16 March 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் டிரைவர் விழுந்தார். அவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி செஞ்சைப் பகுதியை சேர்ந்தவர் அருண். தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டிலிருந்து வேலைக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் கீழஊருணி பகுதி வழியாக வந்துள்ளார்.

அப்போது அங்கு பாதாள சாக்கடை திட்ட பணிக்காக 20 அடி ஆழத்திற்கு மேலாக மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அந்த பள்ளம் தெரியாமல் எதிர்பாராதவிதமாக அந்த பள்ளத்திற்குள் தனது மோட்டார் சைக்கிளுடன் விழுந்துவிட்டார்.

அதில் படுகாயமடைந்த அருண், பள்ளத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்த படி வேதனையில் அலறி னார். இதைப்பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்களாலும் அருணை மீட்க முடியவில்லை. பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பள்ளத்தில் விழுந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருணை காப்பாற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story