சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: காவலாளிக்கு 6 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: காவலாளிக்கு 6 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 March 2020 3:58 AM IST (Updated: 16 March 2020 3:58 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காவலாளிக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

மும்பை மலாடு மேற்கு பகுதியில் உள்ள அரங்கில் கடந்த 2015-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது 8 வயது சிறுமி, சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது, அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்த பாபுலால் (வயது 35) என்பவர் சிறுமியின் வா
யை பொத்தியபடி மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றார். பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனை கண்ட சிறுமியுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதன்பேரில் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து காவலாளி பாபுலாலை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story