கள்ளக்காதலியை கொலை செய்ய துப்பாக்கியுடன் வந்த சமையல்காரர் கைது


கள்ளக்காதலியை கொலை செய்ய துப்பாக்கியுடன் வந்த சமையல்காரர் கைது
x
தினத்தந்தி 16 March 2020 4:13 AM IST (Updated: 16 March 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியை கொலை செய்வதற்காக கோவாவில் இருந்து மும்பைக்கு துப்பாக்கியுடன் வந்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சம்ந்தாநகர் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு ஆசாமி நடமாடி வந்ததை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரிடம் ஒரு நாட்டு துப்பாக்கியும், தோட்டாக்களும் இருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர் கோவாவை சேர்ந்த பங்கஜ் ராய் (வயது38) என்பதும், அங்குள்ள ஓட்டலில் சமையல் காரராக இருந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் சமூக வலைத்தளம் மூலம் இவருக்கு மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இதனால் அவர் மும்பை வந்து அந்த பெண்ணை சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். நாளடைவில் பங்கஜ் ராயின் நடவடிக்கை அந்த பெண்ணுக்கு பிடிக்காமல் போனதால் அவருடனான தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பங்கஜ் ராய் அந்த பெண்ணை கொலை செய்வதற்காக துப்பாக்கியுடன் மும்பை வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பங்கஜ் ராயை கைது செய்தனர்.

Next Story