கொரோனாவை தடுக்க விழிப்புணர்வு துண்டுபிரசுரம் - சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்
கொரோனாவை தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் பயணிகள், வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதையும் மிரட்டி வருகிற கொரோனா வைரஸ் தற்ேபாது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனுக்குடன் அனைத்து அரசு மருத்துவ மனை மருத்துவர்களுக்கும் கொரோனா வைரஸ் யாருக்கும் வராமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி நிர்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, பசுமை பாரத இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிவகாசி சுகாதார வட்டார துணை இயக்குனர் ராம் கணேஷ் கைகளை கழுவுதல் குறித்தும் முக கவசம் அணிவது குறித்தும் விளக்கினார். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையம், ெரயில் நிலையம், மார்க்கெட் பகுதி, அரசு மருத்துவமனைகள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது என்று கூறினார்.
பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சந்திரபிரபா எம்.எல்.ஏ.வழங்கினார். அவ்வப்போது அவர், கொரோனா வைரஸ் யாருக்கும் வராமல் தடுப்போம், காப்போம், பாதுகாப்பான முறைகளான கைகழுவுதல், முககவசம் அணிதல் போன்றவற்றை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். பஸ்நிலையத்தில் அரசு பஸ்களில் மருந்து தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலவள வங்கி தலைவர் முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் நகர செயலாளர் முத்துராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் நடராஜன், அங்குராஜ், கந்தசாமி, திருப்பதி, மீரா, தனலட்சுமி முருகன், ரெட்டியபட்டி வட்டார மருத்துவ அலுவலர் சபரீஷ் பிரபு, நடமாடும் மருத்துவ நிலையமருத்துவர் நரேந்திர குமார், நகர்ப்புற சுகாதார மையத்தின் மருத்துவர் கலா, பசுமை இயக்கத்தின் சார்பில் ராஜசேகர் செல்வராஜ், செல்வகுமார், எக்ஸ்னோரா அமைப்பு சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனி குரு சரவணன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story