கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு 31-ந் தேதி வரை விடுமுறை - துணைவேந்தர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக துணைவேந்தர் தாஸ் அறிவித்துள்ளார்.
திருவாரூர்,
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாகவும், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் தாஸ் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story