கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்; கலெக்டர் வழங்கினார்
ஆம்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் சிவன் அருள் வழங்கினார்.
ஆம்பூர்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆம்பூர் நகராட்சி மற்றும் விசை இயக்கம் சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளர் எல்.குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் செண்பகவள்ளி முன்னிலை வகித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கலந்து கொண்டு பஸ்நிலைய பயணிகளுக்கும், பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விசை இயக்கம் அறிவொளி ஆனந்தன் நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து ஆம்பூர் ரெயில் நிலையத்தில் வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்திரி சுப்பிரமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் நகராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story