குப்பைகளை மறுசுழற்சி செய்ய மேலும் 10 நிறுவனங்களுக்கு அனுமதி சென்னை மாநகராட்சி தகவல்


குப்பைகளை மறுசுழற்சி செய்ய மேலும் 10 நிறுவனங்களுக்கு அனுமதி   சென்னை மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 17 March 2020 3:30 AM IST (Updated: 16 March 2020 10:35 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சியில் குப்பைகளை மறுசுழற்சி செய்ய கூடுதலாக 10 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சியின், மக்கும் குப்பையை கையாள்வதற்கும், மக்காத திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான சேவைகளை வழங்க இதுவரை 30 நிறுவனங்கள் 2 கட்டமாக இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் விவரங்கள் www.chennaicorporation.gov.in என்ற பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 3-ம் கட்டமாகவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒரு வருடத்திற்கு மக்கும் குப்பைகளை கையாள்வதற்கான சேவைகளை வழங்கவும், மக்காத திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான சேவைகளை வழங்கவும் கூடுதலாக 10 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மற்றும் அதிக அளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் உரிய கட்டணம் செலுத்தி மக்கும் மற்றும் மக்காத திடக் கழிவுகளை முறையாக கையாண்டு குப்பைக்கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லும் குப்பையின் அளவை குறைக்க தங்கள் பங்களிப்பினை அளிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல் அனைத்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story