ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி


ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 17 March 2020 3:30 AM IST (Updated: 17 March 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பகுதியில் சில வருடங்களாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டு அருகே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.

பின்னர், மீண்டும் அந்த பகுதியில் மண்ணை போட்டு மூடினர். ஆனால் தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாததால் அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டது.

இதில் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

பல மாதமாக சீரமைக்கப்படாமல் இருக்கும் இந்த பள்ளமானது மழை பெய்தவுடன் குளம் போல காட்சியளிக்கிறது..

மேலும், ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்துக்கு வரும் அனைத்து பஸ்களும் இந்த பள்ளத்தை கடந்து சென்று வரும் நிலையில், சில நேரங்களில் பஸ்சில் இருந்து பயணிகள் இந்த பள்ளத்தில் கீழே விழுந்து விடுகின்றனர்.

இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த பிரமாண்ட பள்ளத்தை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Next Story