கோவில்கள் மேம்பாட்டிற்கு ரூ.291 கோடி நிதி ஒதுக்கீடு மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி தகவல்
கர்நாடகத்தில் கோவில்களின் மேம்பாட்டிற்கு ரூ.291 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக சட்டசபையில் மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் லால்ஜி மெண்டன் கேட்ட கேள்விக்கு மீன்வளத்துறை மற்றும் அறநிலையத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி பதிலளிக்கையில் கூறியதாவது:-
வீடுகள் கட்ட...
கர்நாடகத்தில் மீனவர்களுக்கு கடந்த 2017-18-ம் ஆண்டு 3 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, அந்த பணியை ராஜீவ்காந்தி வீட்டு வசதி கழகத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக ரூ.24.70 நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நிதியை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். மீனவர்கள் மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகளை கட்ட திட்டமிட்டு உள்ளோம்.
வீடுகள் கட்டுவதற்கு அரசு வழங்கும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்து மந்திரிசபையில் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கர்நாடகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களின் மேம்பாட்டிற்காக கடந்த 3 ஆண்டில் ரூ.291.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அனுமதி வழங்கலாம்
கோவில்களை சீரமைப்பது, குடமுழுக்கு நடத்துவது போன்ற பணிகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டது. ரூ.1 கோடி வரையிலான பணிகளுக்கு மாவட்ட கலெக்டர்களே அனுமதி வழங்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story