மாவட்ட செய்திகள்

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யக் கோரிக்கை + "||" + Nellai Government Siddha Medical College Students Sitting Struggle

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யக் கோரிக்கை

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யக் கோரிக்கை
தங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யக் கோரி நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நெல்லை,

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் படித்து வருகிறார்கள். வெளி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள்.

இந்த மருத்துவ கல்லூரிக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் தங்கும் விடுதி இருந்தது. அங்கு மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த தங்கும் விடுதி இடிக்கப்பட்டது. மேலும் அந்த விடுதி தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் வெளியே அறை எடுத்து தங்கி படித்து வந்தனர்.


இந்த நிலையில் விடுமுறை முடிந்து நேற்று வந்த மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் சாமியானா பந்தல் அமைத்து உள்ளிருப்பு போராட்டதை தொடங்கினார்கள். வீட்டில் இருந்து குடங்கள், படுக்கை, தலையணை உள்ளிட்ட உைடமைகளை கொண்டு வந்தனர். அவற்றை பந்தல் முன்பு வைத்து போராட்டத்தை நடத்தினர்.

வெளியூரில் இருந்து வந்து படிக்கும் தங்களுக்கு(மாணவர்களுக்கு) தங்கும் விடுதி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிகையை முன் வைத்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும் போது, “நாங்கள் கல்லூரியில் சேரும் போது, தங்கும் விடுதி வசதி இருக்கிறது என்று கூறினார்கள். அதை நம்பி தான் நாங்கள் இந்த கல்லூரியில் சேர்ந்தோம். தற்போது நாங்கள் வெளியே அறை தங்கி படித்து வருகிறோம். தினந்தோறும் வெளியே சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது.

அதை எங்களால் சமாளிக்க முடியவில்லை. இது பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை கூறிவிட்டோம். சாப்பாடுக்காவது ஒரு மெஸ் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டோம். எங்கள் கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 19 பேர் இங்கு இருக்கிறார்கள். மொத்தம் 110 பேர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். நாங்கள் வகுப்புகளுக்கு செல்வோம்.. அதன் பிறகு இங்கு வந்து தங்கி விடுவோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்“ என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
நெல்லை நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2. நெல்லை, தென்காசியில் கொட்டித்தீர்த்த கனமழை: தாமிரபரணியில் சீறிப்பாயும் தண்ணீர் - வீடுகளில் வெள்ளம் புகுந்தது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிர பரணி ஆற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் தண்ணீர் சீறிப்பாய்ந்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், படகு மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
3. நெல்லை, தென்காசியில் கொட்டித்தீர்த்த கனமழை: தாமிரபரணியில் சீறிப்பாயும் வெள்ளம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.
4. நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 24 ஆடுகளை கடித்துக்கொன்றது
வடக்கு விஜயநாராயணம் பகுதியில் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 24 ஆடுகளை கடித்துக்கொன்றது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
5. நெல்லையில் பள்ளிகள் திறப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை; பெற்றோர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது
பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இேதபோல் நெல்லை மாவட்டத்தில் 60 பள்ளிக்கூடங்களில் பெற்றோருடன் கருத்து கேட்பு கூட்டமும் நடந்தது.