மும்பை- அலிபாக் இடையே கப்பலில் பயணம் செய்ய ரூ.225 கட்டணம் நிர்ணயம்


மும்பை- அலிபாக் இடையே  கப்பலில் பயணம் செய்ய ரூ.225 கட்டணம் நிர்ணயம்
x
தினத்தந்தி 17 March 2020 5:06 AM IST (Updated: 17 March 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

மும்பை- அலிபாக் இடையே கப்பலில் பயணம் செய்ய ரூ.225 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் நீர்வழி போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் மும்பை- அலிபாக் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ேராபக்ஸ் என அழைக்கப்படும் இந்த கப்பலில் பயணிகள் தங்கள் வாகனங்களையும் ஏற்றிச்செல்ல முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது இந்த கப்பலில் 500 பயணிகள் மற்றும் 145 வாகனங்கள் வரை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது மும்பை பாவுச்சா தக்கா- அலிபாக்கில் உள்ள மாந்த்வா இடையே தலா 2 சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளது.

மழைக்காலம் முதல் தினமும் தலா 6 சேவைகளை இயக்க கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?

இதில் மும்பை- அலிபாக் கப்பலில் பயணம் செய்ய 3 விதமான கட்டணங்கள நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளியில் இருக்கையில் உட்கார்ந்தபடி செல்ல ரூ.225 கட்டணமாகும். ஏ.சி. அறையில் அமர்ந்தபடி செல்ல ரூ.335 கட்டணம். சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.555 ஆகும்.

இதேபோல கப்பலில் சைக்கிள் கொண்டு செல்ல ரூ.110-யும், மோட்டார் சைக்கிளுக்கு ரூ.220, சிறிய காருக்கு ரூ.880, நடுத்தர ரக காருக்கு ரூ.1,320, பெரிய கார்களுக்கு ரூ.1,760 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கப்பலில் பயணம் செய்த சுரேக்கா என்ற பெண் கூறுகையில், எப்போதாவது பயணம் செய்பவர்களுக்கு கட்டணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. ஆனால் தினமும் சென்று வரும் மக்களுக்கு இந்த கட்டணம் அதிகபட்சமாக உள்ளது, என்றார்.

Next Story