குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசியதாக மந்திரி நிதின் ராவுத் மீது போலீசில் புகார்


குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசியதாக   மந்திரி நிதின் ராவுத் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 17 March 2020 5:13 AM IST (Updated: 17 March 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசியதாக மின்சார துறை மந்திரி நிதின் ராவுத் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில மின்சார துறை மந்திரியாக இருப்பவர் நிதின் ராவுத். இவர் மீது நாக்பூரில் உள்ள ஜாரிபட்கா போலீஸ் நிலையத்தில் அப்பகுதி பா.ஜனதா தலைவர்கள் புகார் அளித்து உள்ளனர். அந்த புகாரில், கடந்த 8-ந் தேதி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மந்திரி நிதின் ராவுத் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதின் ராவுத் மீது ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ஒருவரும் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

மந்திரி மறுப்பு

இது குறித்து மந்திரி நிதின் ராவுத் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரானது அல்ல. அவர்களின் சாதிய, மனுதர்ம கொள்கைகளுக்கு தான் எதிரானது. அதே சமூகத்தை சேர்ந்த பல தலைவர்கள் காங்கிரசை வழி நடத்தி வருகின்றனர். மேம்பட்ட சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்ட அவர்களை நினைத்து பெருமை அடைகிறோம்.

ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக தான் நான் பேசினேன். எந்த சமூகத்தினரையும் காயப்படுத்தும் எண்ணத்துடன் பேசவில்லை’’ என்றார்.

Next Story