தூத்துக்குடியில் விற்பனைக்கு குவிந்த தர்பூசணி பழங்கள்
தூத்துக்குடியில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
வெயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் மதிய நேரங்களில் வெளியில் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்ச்சியான பொருட்களை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் சாலையோரங்களில் இளநீர், நுங்கு, தர்பூசணி, கரும்பு சாறு, கம்பங்கூழ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் ஆங்காங்கே உருவாகி உள்ளன.
தர்பூசணி
தூத்துக்குடியில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக அதிகளவில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. வடமாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் வரத்து அதிகமாக உள்ளது. மேலும் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பழங்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Related Tags :
Next Story