மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் 900 பேர் மீது வழக்கு + "||" + Near Srivaikundam Public Meeting Against Citizenship Amendment Act

ஸ்ரீவைகுண்டம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் 900 பேர் மீது வழக்கு

ஸ்ரீவைகுண்டம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் 900 பேர் மீது வழக்கு
ஸ்ரீவைகுண்டம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் நடந்தது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, 900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பொதுக்கூட்டம் 

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை கண்டித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணையில் பொதுக்கூட்டம் நடந்தது. ஆறாம்பண்ணை மற்றும் சுற்றுவட்டார ஜமாத்கள், இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த பொதுக்கூட்டத்துக்கு ஆறாம்பண்ணை பள்ளிவாசல் செயலாளர் மொன்னா முகமது தலைமை தாங்கினார்.

ஜமாத்துல் உலமா சபை முன்னாள் மாநில தலைவர் சலாஹித்தின், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் உஸ்மான், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

900 பேர் மீது வழக்கு 

கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, தி.மு.க. மாநில செய்தி தொடர்பாளர் பிரசன்னா, காங்கிரஸ் மாநில பேச்சாளர் பால்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக முக்கிய நிர்வாகிகள் 11 பேர் உள்பட 900 பேர் மீது முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.