வேலை செய்த போது கைவரிசை: வீட்டில் நகைகள் திருடிய பெண் கைது
கோயம்பேட்டில் வீடு ஒன்றில் வேலை செய்த பெண் ஒருவர் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
கோயம்பேடு சின்மயா நகர், வி.வி.கோவில் தெருவை சேர்ந்தவர் எர்னஸ்ட் டேவிட் (வயது 47). இவரது வீட்டில் அடிக்கடி நகைகள் காணாமல் போனதாக தெரிகிறது. இந்த திருட்டு தொடர்பாக தனது வீட்டில் வேலை செய்து வரும் ஆழ்வார்திருநகரை சேர்ந்த ராகேல்(35), என்ற பெண் மீது சந்தேகம் இருப்பதாக கூறி எர்னஸ்ட் டேவிட் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான போலீசார் ராகேலை அழைத்து விசாரித்தனர்.
கைது
அப்போது அவர் கடந்த 9 வருடங்களாக அந்த வீட்டில் வேலை செய்து வருவதாகவும், அப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சிறுக, சிறுக நகைகளை திருடி அடகு கடையில் வைத்து செலவு செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 பவுன் நகைகள், மற்றும் வைர கம்மல் ஒன்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story