குடியாத்தத்தில் கொரோனா வைரஸ் தீவிர கண்காணிப்பு மையம் - இணை இயக்குனர் ஆய்வு


குடியாத்தத்தில் கொரோனா வைரஸ் தீவிர கண்காணிப்பு மையம் - இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 18 March 2020 3:45 AM IST (Updated: 18 March 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் கொரோனா வைரஸ் தீவிர கண்காணிப்பு மையத்தை வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இ.யாஸ்மின் ஆய்வு செய்தார்.

குடியாத்தம், 

குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் நகராட்சி சமுதாயக் கூடத்தில் கொரோனா வைரஸ் தீவிர கண்காணிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதனை வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இ.யாஸ்மின் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கே.கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் எச்.ரமே‌‌ஷ், டி.சி.எம்.எஸ். தலைவர் ஜே. கே.என்.பழனி, நகராட்சி சுகாதார அலுவலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் இணை இயக்குனர் யாஸ்மின் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் தீவிர கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த சமுதாய கூடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். இங்கு வெளிநாட்டில் இருந்து விமானம் மற்றும் கப்பல் வழியாக வரும் நபர்கள் 14 நாட்களுக்கு தங்க வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். அவர்களை காலை, மாலை இருவேளையும் டாக்டர்கள் குழு அவர்களை ஆய்வு செய்வார்கள். அதற்காக இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் இன்று (புதன்கிழமை) முதல் செயல்பட உள்ளது. என்றார்.

Next Story