நாகர்கோவிலில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் 4 பேர் கைது


நாகர்கோவிலில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2020 5:15 AM IST (Updated: 18 March 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில், கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று இந்து கல்லூரி அருகே உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மூடை, மூடையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4 பேர் கைது

இதுதொடர்பாக காட்டுபுதூரை சேர்ந்த ஆறுமுகம்(வயது 42) மற்றும் குடோன் ஊழியர்கள் வெள்ளமடத்தை சேர்ந்த மனோகரன், வடிவீஸ்வரம் ராஜா மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாக்கியதாஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இந்து கல்லூரி அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடோன் போல் அமைத்து குட்கா பதுக்கி வைத்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்து சுமார் 20 மூடை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

மேலும் அங்கு இருந்த ரூ.7 லட்சத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

தீவிர விசாரணை

கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆறுமுகம் என்பவர் நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் பிஸ்கட், முறுக்கு ஆகிய பொருட்களை மொத்த விற்பனை செய்யும் வியாபாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story