மாவட்ட செய்திகள்

ரெயில் நிலையங்களில் கூட்டத்தை தடுக்க பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்பு + "||" + Platform ticket fee increased to Rs.50

ரெயில் நிலையங்களில் கூட்டத்தை தடுக்க பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்பு

ரெயில் நிலையங்களில் கூட்டத்தை தடுக்க பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்பு
ரெயில் நிலையங்களில் கூட்டத்தை தடுக்க பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
மும்பை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ரெயில்வே நிர்வாகம் ஏ.சி. பெட்டிகளில் உள்ள திரை சீலைகளை அகற்றியது. மேலும் பயணிகளுக்கு கம்பளி போர்வை கொடுப்பதையும் நிறுத்தியது. இதேபோல மும்பையில் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மின்சார ரெயில்கள் தினமும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

கட்டணம் உயர்வு

இந்தநிலையில் ரெயில்நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மத்திய ரெயில்வே, பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளது. மத்திய ரெயில்வே மும்பை, புனே, புசாவல், சோலாப்பூர் மண்டலங்களில் உள்ள ரெயில்நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை ரூ.50 ஆக நிர்ணயம் செய்து உள்ளது.

மேற்கு ரெயில்வேயும் பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை ரூ.15 முதல் 50 வரை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதில் பாந்திரா ரெயில் முனையம், மும்பை சென்ட்ரல் பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.40 ஆகவும், போரிவிலி, தாதர், அந்தேரி ரெயில் நிலையங்களில் ரூ.30, விரார், சர்ச்கேட் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ரூ.20 என பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக மேற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.