புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திடீர் ஆய்வு


புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 18 March 2020 11:30 PM GMT (Updated: 18 March 2020 11:36 AM GMT)

புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

செங்கோட்டை, 

புளியரை சோதனை சாவடியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு 

கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக தமிழக– கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

செங்கோட்டை தாசில்தார் கங்கா, இலத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி, புளியரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார், இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோதி, தென்காசி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், நேர்முக உதவியாளர் ரகுபதி, வடகரை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், செந்தில்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

இதையடுத்து புதூர் நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

போக்குவரத்து பாதிப்பு 

நிகழ்ச்சியில் நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கேரளாவில் இருந்து வரும் கார், மோட்டார்சைக்கிள் வாகனங்களை தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் தலைமையில் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், புளியரை சப்–இன்ஸ்பெக்டர் ரூபி ஞானபரிமளா மற்றும் சுகாதார துறையினர் திருப்பி கேரள நோக்கி அனுப்பி வருகின்றனர்.

மேலும் இரு மாநில அரசு பஸ்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. கேரள வாகனங்கள் தமிழக எல்லைக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையால் 100–க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் இரு மாநில போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

Next Story