தடுப்பு வேலி கம்பியில் மோதி மான் பலியான பரிதாபம்


தடுப்பு வேலி கம்பியில் மோதி மான் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 19 March 2020 3:30 AM IST (Updated: 18 March 2020 5:28 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அருகே தடுப்பு வேலி கம்பியில் மோதி மான் பலியானது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமம் பாலாற்றங்கரை அருகே மலைப்பகுதியில் வசித்த மான் தண்ணீர் தேடி நேற்று இரவு வெளியில் வந்துள்ளது. இந்த நிலையில் வழிதவறிய அந்த மான் விவசாய விவசாய நிலத்துக்குள் புக முயன்றது. 

ஆனால் அதனை சுற்றி பாடப்பட்ட தடுப்பு வேலியின் கம்பியில் மோதியதில் மண்டை உடைந்து இறந்தது. 

தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story