கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்
காட்டுக்காநல்லூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் பெரிய ஏரிப்பகுதியில் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணியில் பெண் தொழிலாளர்கள் தூர்வாரும் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு குறித்து நேற்று ஊராட்சி தலைவர் ரேணு தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி துணை தலைவர் கவிதாசுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் தேவராஜ் வரவேற்றார். முகாமில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதாரத்துறை ஆய்வாளர் வேலாயுதம் கலந்து கொண்டு கொரோனா நோய், டெங்கு கொசு ஒழிப்பு முறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.
மேலும் கொரோனா நோய் பரவாமல் தடுக்க கைகழுவுவதன் அவசியம், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் கை கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story