ஒரு கிலோ கோழிக்கறிக்கு இன்னொரு கிலோ இலவசம்
ஆம்பூரில் ஒரு கிலோ கோழிக்கறிக்கு இன்னொரு கிலோ இலவசம் என வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஆம்பூர்,
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவுவது குறித்து மக்களிடையே பல்வேறு விதமான அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் பிராய்லர் கோழி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பினர். இதைத்தொடர்ந்து அச்சத்தால் கோழிக்கறி வாங்குவதை பலர் தவிர்தது வந்தனர். அதன் காரணமாக அவற்றின் விலை கிடுகிடுவென சரிந்து கிலோ ரூ.50, ரூ.60 என விற்பனையானது.
இவ்வாறு பல மடங்கு விலை குறைந்தும் அசைவ பிரியர்கள் கோழிக்கறியை வாங்க முன்வரவில்லை. குறிப்பாக ஆம்பூரில் உள்ள சிக்கன் கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டும் இருந்து கொண்டே இருக்கும். கொரோனா வைரஸ் பீதியால் ஒரு சிலரை தவிர யாகும் கோழிக்கறியை வாங்க வருவதில்லை.
இந்த நிலையில் விற்பனை சரிவை தடுக்க கோழி இறைச்சிக்கடைகளில் ஒரு கிலோ கோழிக்கறி வாஙகினால் மற்றொரு கிலோ இலவசம் என பேனர்கள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதேபோல் ஆம்பூரில் உள்ள சில பிரியாணி கடைகளில் 2 பிரியாணி வாங்கி ஒரு பிரியாணி இலவசம் என கூறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story