மோட்டார்சைக்கிளையே நடமாடும் கிராம நிர்வாக அலுவலகமாக மாற்றிய அலுவலர்


மோட்டார்சைக்கிளையே நடமாடும் கிராம நிர்வாக அலுவலகமாக மாற்றிய அலுவலர்
x
தினத்தந்தி 18 March 2020 10:15 PM GMT (Updated: 18 March 2020 1:10 PM GMT)

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் நடமாடும் கிராம நிர்வாக அலுவலகமாக தனது மோட்டார்சைக்கிளை மாற்றி பயன்படுத்தும் கிராம நிர்வாக அதிகாரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு:–

கலசபாக்கம், 

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவனாம்பட்டு ஊதிரம்பூண்டி ஆகிய 2 ஊராட்சிகளுக்கு உள்ளடக்கிய 5–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக குப்புசாமி பணியாற்றி வருகிறார்.

25 ஆண்டுகளாக கிராம உதவியாளராக பணியாற்றிய இவர் 2018–ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று முதல் தேவனாம்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். தனது மோட்டார் சைக்கிளையே நடமாடும் அலுவலகமாக வைத்து அப்பகுதி மக்களுக்கு தேவையான சான்றிதழ்களை உடனடியாக வழங்கி வருகிறார்.

இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இதுவரை எங்கள் கிராமத்திற்கு எத்தனையோ கிராம நிர்வாக அலுவலர்கள் வந்து சென்றனர். ஆனால் அவர்கள் தன் அலுவலகத்தில் வைத்து தான் நாங்கள் பார்க்க வேண்டிய நிலை இருந்தது.

தற்போது வந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் எங்கு இருந்தாலும் விவசாய ஆகிய நாங்கள் போன் செய்து கேட்டால் உடனே வரச்சொல்லி அங்கே உடனடியாக எங்களுக்கு உரிய சான்றிதழ்களை இலவசமாக வழங்கி வீண் அலைச்சலையும் தவிர்த்து விடுகிறார். இதனால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்றனர்.

Next Story