திசையன்விளை மார்க்கெட்டில் மீன் விலை 2 மடங்கு உயர்வு ஒரு கிலோ சீலா ரூ.1200–க்கு விற்பனை

திசையன்விளை மார்க்கெட்டில் மீன் விலை 2 மடங்கு உயர்வு  ஒரு கிலோ சீலா ரூ.1200–க்கு விற்பனை
x
தினத்தந்தி 19 March 2020 4:00 AM IST (Updated: 18 March 2020 7:10 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.1,200–க்கு விற்பனை செய்யப்பட்டது.

திசையன்விளை,

திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.1,200–க்கு விற்பனை செய்யப்பட்டது.

மீன் மார்க்கெட் 

நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய மீன் மார்க்கெட், திசையன்விளை மீன் மார்க்கெட் ஆகும். இங்கு மீன்களை வாங்குவதற்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக அசைவ பிரியர்கள் பெரும்பாலானவர்கள் மீன் உணவிற்கு மாறியுள்ளனர்.

இதனால் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீன்களின் விலையும் நேற்று முன்தினத்தை காட்டிலும் மீன்கள் விலை 2 மடங்கு உயர்ந்து நேற்று விற்பனை செய்யப்பட்டது.

10 ரூபாய்க்கு 3 சாளை 

சாளை ரக மீன்கள் 10 ரூபாய்க்கு 3 எண்ணமும், வலை மீன் கிலோ ரூ.600–க்கும், சீலா மீன் கிலோ ரூ.1200–க்கும், மாவுளா மீன் கிலோ 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் அனைத்து ரக மீன்களும் 2 மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

Next Story