கடையம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை


கடையம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 March 2020 3:00 AM IST (Updated: 18 March 2020 7:25 PM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடையம், 

கடையம் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்டோ டிரைவர் 

கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவருடைய மகன் திருநாவுக்கரசு (வயது 26). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். அவருடைய தாயார் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளார். தந்தையும் இறந்து விட்டார். திருநாவுக்கரசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் தனிமையில் வசித்து வந்தார்.

மேலும் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஊர் அருகே மெயின் ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் திருநாவுக்கரசு தூக்கு போட்டார்.

பரிதாப சாவு 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை உடனடியாக மீட்டனர். இதில் மயங்கிய அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, திருநாவுக்கரசு ஏற்கனவே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கடையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரசய்யன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story