மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் + "||" + Distribution of Corona Virus Awareness leaflets

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்
பென்னாகரத்தில் அ.தி.மு.க. சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்.
பென்னாகரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பென்னாகரத்தில் அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய பிரிவு தலைவரும், தர்மபுரி மாவட்ட பால்வள தலைவருமான டி.ஆர்.அன்பழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பென்னாகரம் கடைவீதி, பஸ் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள்,பஸ் பயணிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு துண்டுபிரசுரங்கள் வினிேயாகம் செய்தனர். மேலும் வெளிநாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் தென்பட்டால் உடனே அருகில் உள்ள சுகாதார நிலையம், பொது அரசு மருத்துவமனை ஆகியவற்றை அணுக வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவி, கலைவாணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அற்புதம் அன்பு, ஆடு வளர்ப்போர் சங்கத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
பத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
2. வாகனத்தில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
கமுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாகனத்தில் வினியோகம் செய்யப்பட்டது.
3. உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது
உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது என மன்னார்குடி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.
4. விழிப்புணர்வு ஏற்படுத்தி ‘கொரோனா போரை எதிர்கொள்ள தயாராவோம்’ - ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் கடிதம்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா போரை எதிர்கொள்ள தயாராவோம் என்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
5. கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சிதம்பரம் நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
சிதம்பரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.