காஞ்சிரங்குடி ஊராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வு முகாம்


காஞ்சிரங்குடி ஊராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 18 March 2020 9:30 PM GMT (Updated: 18 March 2020 7:54 PM GMT)

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

கீழக்கரை, 

கீழக்கரை பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வட்டார மருத்துவர் ரசிக்தீன், சுகாதார ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு ஆய்வாளர் பூபதி, துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, துப்புரவு பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்குடி ஊராட்சியில் கலெக்டர் வீரராகவராவ் அறிவுறுத்தலின் பேரில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் முனியசாமி தலைமையில், துணை தலைவர் பரிக்கா யூசுப், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நரசிம்மன், ஊராட்சி செயலர் அமுதா சத்தியேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி தென்பட்டால் உடனே அரசு சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிரங்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கருவேல மரங்களை எந்திரம் மூலம் அகற்றி குப்பைகளை நீக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் வணிக வளாகம், பஸ் நிறுத்தம் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு பொதுமக்களிடம் கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Next Story