மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை + "||" + Woman commits suicide by fire

தாய் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை

தாய் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை
தாய் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி, 

திருத்தணியில் உள்ள பைபாஸ் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவர் திருத்தணியல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தட்டச்சர் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இந்திராணி (59). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்திராணியின் தாயார் காசியம்மாள் (75) உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆண்டு உயிரிழந்தார். தாயின் மீது அளவு கடந்த பாசம் கொண்ட இந்திராணி மனநலம் பாதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்திராணி திடீர் என உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டார். தான் தன்னுடைய தாயிடம் செல்ல வேண்டும் என கூறிக்கொண்டு உடலில் தீ வைத்துக்கொண்டார்.

தீயில் கருகி பெண் சாவு

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் வீட்டுக்கு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார். இதற்கிடையே இந்திராணி தீயில் கருகி பலத்த தீக்காயங்களுடன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்துபோனார்.

தகவல் அறிந்த திருத்தணி போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்திராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சுரண்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
சுரண்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. அம்பை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை கடன் தொல்லையால் பரிதாபம்
அம்பை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. உளுந்தூர்பேட்டை அருகே பெண், தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.