ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள், பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள், பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்துக்கு பணிபுரிய வரும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை நடத்தப்பட்டது. குறிப்பிட்ட வெப்பநிலை இருந்தால் காய்ச்சல் இல்லை என்பதும், அதற்கு மேல் இருந்தால் காய்ச்சல் உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டு, அதன்பேரில் உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பதிவேடு
கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஒருவர் முழு பாதுகாப்பு கவச உடையணிந்து தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்து, அவர்களது பெயர்களை பதிவேட்டில் குறிப்பிடுகின்றார். இந்த பரிசோதனையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டனர். மேலும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா? என்பது உடனுக்குடன் கண்டறியப்படும்.

Related Tags :
Next Story