கணவரிடம் இருந்து மீட்க கோரி இளம்பெண் ஆன்-லைன் மூலம் புகார் சவுதியில் இருந்து புளியந்தோப்பு போலீசாருக்கு அனுப்பினார்


கணவரிடம் இருந்து மீட்க கோரி இளம்பெண் ஆன்-லைன் மூலம் புகார்   சவுதியில் இருந்து புளியந்தோப்பு போலீசாருக்கு அனுப்பினார்
x
தினத்தந்தி 18 March 2020 10:15 PM GMT (Updated: 18 March 2020 9:54 PM GMT)

இளம்பெண் கணவரிடம் இருந்து மீட்க கோரி சவுதியில் இருந்து ஆன்-லைன் மூலம் புளியந்தோப்பு போலீசாருக்கு புகார் அனுப்பினார்.

திரு.வி.க.நகர், 

சென்னை புளியந்தோப்பு மசூதி தெருவைச் சேர்ந்தவர் அமீத் அலி. இவருடைய மனைவி மர்லியா பானு (வயது 31). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அமித் அலி, சவுதி அரேபியாவில் உள்ள அரசு துறையில் வேலை செய்து வருகிறார். மனைவி, குழந்தையுடன் சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். மர்லியா பானு, சவுதி அரேபியாவில் இருந்து ஆன்-லைன் மூலம் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

விடுமுறையில் தனியாக சென்னை சென்ற எனது கணவர், எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்து நான் தட்டிக்கேட்டதால் தினமும் என் மீது சுடு தண்ணீரை ஊற்றி கொடுமைப்படுத்துகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரிடம் இருந்து என்னை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுபற்றி அமித் அலியை சென்னை வரவழைத்து விசாரிக்கப்படும் என்றனர்.

Next Story