கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவினாசி அரசு மருத்துவமனையில் 3 படுக்கைகளுடன் தனி வார்டு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவினாசி அரசு மருத்துவமனையில் 3 படுக்கைகளுடன் தனி வார்டு
x
தினத்தந்தி 19 March 2020 4:31 AM IST (Updated: 19 March 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவினாசி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 3 படுக்கைகளுடன் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது.

அவினாசி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில், வியாபாரம் முடங்கிப்போனது. திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டாரத்தில் உள்ள கோழி இறைச்சி கடைகள் மற்றும் அசைவ ஓட்டல்களில் 60 சதவீத வியாபாரம் குறைந்தது. பொதுமக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.

அவினாசி சுற்றுவட்டாரப்பகுதியில் ஏராளமான பனியன் கம்பெனிகள், விசைத்தறி கூடங்கள் உள்ளன. இவைகளில் பீகார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிப்புக்குள்ளாகி அவினாசி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக சளி, இருமல்,காய்ச்சல் என அதிக அளவில் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் அவினாசி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவினாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரமணன் கூறுகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டு அமைத்து புதிதாக 3 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்களும், மருந்து, மாத்திரைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.


Next Story