திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா தொற்று நோய் காரணமாக, காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால்,
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு, காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட நலவழித்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சனீஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான நளன் குளத்தில் தண்ணீர் இறைக்கப்பட்டு, பக்தர்கள் புனித நீராடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தூய்மையாக இருக்கும் வகையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டுக்கு வந்தவுடன் 28 நாள்களுக்கு கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்குள் வருவதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு
தொடர்ந்து, பக்தர்களின் நலன் கருதி, கோவிலின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-
கொரோனா தொற்றுநோய் குறித்து பக்தர்கள் இடையே அச்சம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, கோவிலின் அனைத்து பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்த்து எளிமையாக சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story