கொரோனா வைரஸ் எதிரொலி: பெட்ரோல் போட வருபவர்களுக்கு முக கவசம்


கொரோனா வைரஸ் எதிரொலி: பெட்ரோல் போட வருபவர்களுக்கு முக கவசம்
x
தினத்தந்தி 20 March 2020 3:30 AM IST (Updated: 19 March 2020 6:29 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக குடியாத்தம் சித்தூர்கேட் முனாப்டிப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் உரிமையாளர் ஆர்.பிரபுராம் பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 300 முககவசங்கள் வீதம் ஒரு வாரத்திற்கு 2 ஆயிரம் முக கவசங்கள் வழங்கும் திட்டமிட்டார்.

இந்த முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சியை குடியாத்தம் தாசில்தார் வத்சலா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விற்பனை அலுவலர் சீனிவாசன், துணை தாசில்தார் செந்தில்குமார், குடியாத்தம் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.ஏ.கே.சீனிவாசன், தொழிலதிபர்கள் டி.ராஜேந்திரன், எம்.என்.எஸ்அருள், நடராஜன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story