டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம்


டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம்
x
தினத்தந்தி 20 March 2020 3:30 AM IST (Updated: 19 March 2020 6:42 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியாத்தம், 

குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் கண்டக்டர், டிரைவர் மற்றும் பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

குடியாத்தம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெ.கே.என் பழனி முதற்கட்டமாக 100 முக கவசங்களை டிரைவர், கண்டக்டர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து பணிமனைக்கு 500 முக கவசங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் குமரன், அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க குடியாத்தம் பணிமனை தலைவர் அரி, செயலாளர் வெங்கடேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story