டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கோவில்பட்டி,
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால், அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தாசில்தாரிடம் மனு
இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா குழு உறுப்பினர் ராமசுப்பு தலைமை தாங்கினார். கிளை செயலாளர் அழகுசுப்பு, இனாம்மணியாச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ், அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்துபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், ஓய்வு பெற்ற பேராசிரியர் பெருமாள் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தாசில்தார் மணிகண்டனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயாவிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story