கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ; கலெக்டர் தொடங்கி வைத்தார்


கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 March 2020 3:45 AM IST (Updated: 19 March 2020 7:24 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று ராணிப்பேட்டை நகராட்சி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் சுகாதார செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சிப்காட்( ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து துண்டுபிரசுரங்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் முத்துக்கடை பஸ் நிலையத்திற்கு வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களின் படிக்கட்டுகள், கைப்பிடி கம்பிகளில் நகராட்சியின் பணியாளர்களை மூலம் கொரோனா நோய் தடுப்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

 இதில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம் பகவத், நகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி, உள்பட வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ரெட்கிராஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story