போலீசார் முகக்கவசம் அணிந்து புகார் மனுக்கள் பெற வேண்டும்; டாக்டர் அறிவுறுத்தல்


போலீசார் முகக்கவசம் அணிந்து புகார் மனுக்கள் பெற வேண்டும்; டாக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2020 4:00 AM IST (Updated: 19 March 2020 9:43 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி புகார் மனுக்கள் பெற வேண்டும் என்று காவலர் மருத்துவமனை டாக்டர் சுகந்தி கூறினார்.


வேலூர், 

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக காவலர் மருத்துவமனை டாக்டர் சுகந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல்துறை சார்பில் போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் கைகளை கழுவ தண்ணீர் தொட்டியும், கொரோனா விழிப்புணர்வு பேனர் போலீஸ் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பலர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் சிலர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வருகின்றனர். எனவே அங்கு பணிபுரியும் போலீசார் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி புகார் மனுக்கள் பெற வேண்டும்.

அதேபோன்று அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணிபுரிபவர்களும் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். தினமும் தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story