கோபியில் தடுப்பு சுவரில் மினி லாரி மோதி கவிழ்ந்தது டிரைவர் உள்பட 4 பேர் காயம்


கோபியில் தடுப்பு சுவரில் மினி லாரி மோதி கவிழ்ந்தது டிரைவர் உள்பட 4 பேர் காயம்
x
தினத்தந்தி 19 March 2020 11:00 PM GMT (Updated: 19 March 2020 9:05 PM GMT)

கோபியில் தடுப்பு சுவரில் மினி லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

கடத்தூர்,

திருப்பூரில் இருந்து கோபி நோக்கி மினி லாரி ஒன்று நேற்று அதிகாலை வந்தது. மினி லாரியை தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டையை சேர்ந்த தினேஷ் (வயது 27) என்பவர் ஓட்டினார்.

இந்த லாரியில் சுமை தூக்கும் தொழிலாளர்களான உத்தரபிரதேசத்தை சேர்ந்த கரியன், மோட்டு, பர்வீன் ஆகியோரும் இருந்தனர்.

கோபி- சத்தியமங்கலம் ரோட்டில் அரசு பயணியர் விடுதி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மினி லாரி மோதி கவிழ்ந்தது.

4 பேர் காயம்

இந்த விபத்தில் டிரைவர் தினேஷ், கரியன், மோட்டு, பர்வீன் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கவிழ்ந்து கிடந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Next Story