கோவை அருகே கைதான பெண் மாவோயிஸ்டு ஸ்ரீமதியிடம் விடிய, விடிய விசாரணை
கோவை அருகே கைதான பெண் மாவோயிஸ்டு ஸ்ரீமதியிடம் விடிய, விடிய கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கோவை,
தமிழக கேரள எல்லையையொட்டி உள்ள அட்டப்பாடி அருகே மஞ்சகண்டி வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது கேரள மாநில தண்டர்போல்டு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் தப்பிச் சென்றனர். தப்பிச்சென்ற பெண் மாவோயிஸ்டு ஸ்ரீமதியின் நடமாட்டத்தை கோவை கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஆனைகட்டியில் இருந்து கோவைக்கு ஸ்ரீமதி பஸ்சில் வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆனைகட்டி மலை அடிவாரத்தில் காத்திருந்த போலீசார் பஸ்சில் வந்த ஸ்ரீமதியை கைது செய்தனர். பின்னர் அவரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
விடிய, விடிய விசாரணை
ஸ்ரீமதியை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கடந்த 16-ந் தேதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சக்திவேல் 26-ந் தேதி வரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாவோயிஸ்டு ஸ்ரீமதியை கியூ பிரிவு போலீசார் பாதுகாப்புடன் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து கியூ பிரிவு போலீசார் மாவோயிஸ்டு ஸ்ரீமதியிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர். ஸ்ரீமதியுடன் வனப்பகுதியில் தங்கி இருந்தவர்கள் யார்?, மாவோயிஸ்டு இயக்கத்தினர் யார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்? ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா? வனப்பகுதியில் இன்னும் எத்தனை மாவோயிஸ்டுகள் உள்ளனர்? என்று விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இன்னும் தொடர்ந்து 7 நாட்கள் ஸ்ரீமதியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story