குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை; அதிகாரிகள் ஆய்வு
குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
படப்பை,
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து படப்பை ஊராட்சி பகுதிகளில் உள்ள பஜார் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் சாலையோர பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்தும் பணிகள், கொசுமருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிகாரி ஆய்வு
இந்த பணிகளை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள் பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள நூலகம், உழவர் சந்தை, தொடக்கப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் முகம்மது ஆரிப்பிடம் தெரிவித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து காய்ச்சல், இருமல், போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து தகுந்த அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
Related Tags :
Next Story