விழுப்புரம் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க 48 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் சூப்பிரண்டு இயக்கி வைத்தார்
விழுப்புரம் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க 48 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இயக்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதை தடுக்கும் பொருட்டு தந்தை பெரியார் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒருங்கிணைந்து பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.3 லட்சம் மதிப்பில் அப்பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இதேபோல் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து மாம்பழப்பட்டு சாலை ரெயில்வே கேட் வரை வணிகர்கள் சார்பில் ரூ.3 லட்சத்தில் 23 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு இயக்கி வைத்தார்
இந்த கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இயக்கி வைத்து அவை செயல்படும் விதம் குறித்து டி.வி. மூலம் கண்காணித்தார். அப்போது அவர் கூறுகையில், குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதற்காக இதுபோன்று கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்கள் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து பொருத்த வேண்டும். இன்னும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். உங்களது குடியிருப்பு பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகேசன், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சுரேஷ், ராஜலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பட்டாபிராமன், கோவிந்தன், பாரதிதாசன், ஜாகிர்உசேன் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story