டிராக்டர் கவிழ்ந்து விபத்து பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சாவு பல்லாரி அருகே சோகம்
பல்லாரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து நடந்த விபத்தில் பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
பல்லாரி,
பல்லாரி மாவட்டம் ஹூவினகடஹள்ளி அருகே கோலலு கிராமத்தில் நேற்று மாலையில் டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரத்தில் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தாசரஹள்ளி அருகே பீரப்பா கிராமத்தை சேர்ந்த சிக்கப்பன்னவர், கீதா, சுனிதா,காலம்மா என்பது தெரிய வந்தது. பலியான மற்றொருவரின் பெயர் தெரியவில்லை.
மேலும், அவர்கள் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து பல்லாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story