கொரோனா அச்சுறுத்தல்: தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் நடை அடைப்பு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேற்று தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் நடை அடைக்கப்பட்டது.
தென்காசி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேற்று தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கை
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடாது என்று அரசு அறிவித்து உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பெரிய மால்கள் அடைக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் இந்து சமய அறநிலைய துறை கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்தது.
கோவில் நடை அடைப்பு
இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் இங்கு பக்தர்களுக்கு நேற்று காலை முதல் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் நடை அடைக்கப்பட்டது. வருகிற 31–ந் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story