திருப்பத்தூர் மாவட்டத்தில் இ–சேவை, ஆதார் மையங்கள் மூடப்பட்டன


திருப்பத்தூர் மாவட்டத்தில் இ–சேவை, ஆதார் மையங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 21 March 2020 3:45 AM IST (Updated: 20 March 2020 6:32 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இ–சேவை, ஆதார் மையங்களை வருகிற 31–ந் தேதி வரை மூட வேண்டும் என கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இ–சேவை மையங்கள், ஆதார் மையங்கள் மூடப்பட்டன. இந்த மையங்களுக்கு வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இ–சேவை, ஆதார் மையங்களின் செயல்பாடுகள் குறித்து மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story