நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் சளி–இருமல், மூச்சுத் திணறலுக்கு ‘ஆடாதொடை’ குடிநீர் வினியோகம்
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் சளி–இருமல், மூச்சுத்திணறலுக்கு ‘ஆடாதொடை‘ குடிநீர் வினியோகம செய்யப்படுகிறது.
நெல்லை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் சளி–இருமல், மூச்சுத்திணறலுக்கு ‘ஆடாதொடை‘ குடிநீர் வினியோகம செய்யப்படுகிறது.
‘ஆடாதொடை‘ குடிநீர்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வரும் நேரத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். மேலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், கலெக்டர் அலுவலகத்திலும் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறியாக கருதப்படும் சளி–இருமல், மூச்சுத்திணறலை கட்டுப்படுத்தும் ‘ஆடாதொடை‘ குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் வழக்கும் நிகழ்ச்சியை சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் விக்டோரியா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சளி–இருமல், காய்ச்சல் இருந்தால் உடனே அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காலை–பிற்பகல்
சளி–இருமல், மூச்சுத்திணறலை கட்டுப்படுத்தும் ‘ஆடாதொடை‘ குடிநீர் சித்த மருத்துவ கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் காலையும், பிற்பகலிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆடாதொடை இலை, அதிமதிரம், அரிசிதிப்பிலி, தாலிசபத்திரி ஆகிய மூலிகைள் மற்றும் தேன் கலந்து ஆடாதொடை குடிநீர் தயார் செய்யப்படுகிறது.
தினந்தோறும் 30 மி.லி. சாப்பிட்டாலே போதும். சளி–இருமல் வராது. பொதுமக்கள் இந்த குடிநீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
காய்ச்சலுக்கு என்று தனியாக கசாயம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா காரணமாக காய்ச்சல் என்று வரும் நோயாளிகளை, நாங்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கல்லூரி துணை முதல்வர் திருத்தணி, உடைவிட மருத்துவர் ராமசாமி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story